இந்தியாவில் போராட்டக்களத்தில் குதித்து சிறை சென்ற முதல் பெண்ணான தோழர் நாகம்மையார் அவர்களின் 89 வது நினைவுநாளில் புகழ்வணக்கம் செலுத்துகிறோம் (மே 11, 1933)

இந்தியாவில் போராட்டக்களத்தில் குதித்து சிறை சென்ற முதல் பெண்ணான தோழர் நாகம்மையார் அவர்களின் 89 வது நினைவுநாளில் புகழ்வணக்கம் செலுத்துகிறோம் (மே 11, 1933)

“ஒத்துழையாமை இயக்க மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் இருக்கிறது”

1922 ம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தை நடத்தி வந்த அன்னை நாகம்மையார் மற்றும் அன்னை கண்ணம்மாள் அவர்கள் இருவரை பற்றியும் திரு.காந்தியடிகள் அவர்கள் கூறிய வரிகள் இவை. அத்தகைய வீரமிக்க போராட்டக் வரலாறு கொண்டவர் அன்னை நாகம்மையார் அவர்கள் ஆவார்.

பிறந்த குடும்பமும், தான் திருமணம் செய்த தந்தை பெரியாரின் குடும்பமும் ஆரிய பிற்போக்குத்தனத்தை கொண்டிருந்தாலும் தந்தை பெரியாரின் தொடர் அறிவுரைகளாலும், முயற்சிகளாலும் சுயமரியாதைப் பாதையில் செல்லத் தொடங்கினார். பெரியாருடன் எல்லா போராட்டங்களிலும் முன் நின்ற அவர், சிறை செல்லவும் தயங்கியவர் இல்லை.

அவர் முன்நின்ற போராட்டங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. 1920 ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்க போராட்டம்.

2. 1921 ம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம். இப்போராட்டத்தில் அன்னையார் ஈடுபட்டதும் அன்றைய ஆங்கிலேய அரசு அதுவரை போட்டிருந்த 144 தடை உத்தரவை நீக்கியது.

3. 1924 ம் ஆண்டு வைக்கம் போராட்டம். பெரியாரின் கைதுக்குப் பிறகு போராட்டத்தை தொடர்ந்து அன்னை கண்ணம்மாள் அவர்கள் உள்ளிட்ட பெண்கள் முன்னெடுக்க போராட்டம் தொடர்ந்தது. அப்பொழுது அங்கு வந்த ஒரு பார்ப்பன காவல்துறை அதிகாரி தன் காவலர்களிடம் “பெண்கள் என்பதால் தனிச் சலுகை காட்டவேண்டாம். ஆண்களை எப்படி அடக்குவீர்களோ அப்படியே செயல்படுங்கள்” என்று உத்தரவிட்டார்.

1930 ம் ஆண்டு குடியரசு, Revolt பத்திரிக்கைகள் அன்னையார் அவர்களின் பொறுப்பிலேயே இயங்கின. திராவிட இயக்க வீராங்கனையும், சுயமரியாதை சுடருமான அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply