



























திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் கடந்த 16ம் தேதி தாக்குதல் நடத்தி அவர்களை கடுமையாக காயப்படுத்தியதோடு அவர்களது சொத்துக்களையும் உடமைகளையும் சேதப்படுத்தினார். இச்சம்பவத்தின் கொடூரத்தையும் அதன் பின்னணியையும் அறிந்துகொள்வதற்காக மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு கடந்த 19ம் தேதி வீரலூர் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 22) அன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் தலைமையில் வீரலூர் சென்ற தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010