கோவை சின்மயா வித்யாலயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக பலியான மாணவி பொன் தாரணியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம்

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லை மற்றும் பள்ளி நிர்வாகத்தினால் இழைக்கப்பட்ட அநீதியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன் தாரணியின் மரணத்திற்கு நீதி கேட்டு, அனைத்து முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று (14-11-2021) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு பள்ளியின் சார்பாக இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகாரளிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply