புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவரை படுகொலை செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவரை படுகொலை செய்தும், மேலும் இருவரை கைது செய்தும் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினரை 21-10-2021 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடம் உரையாடிய காணொலி.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவரின் உடல் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட ஊர் மக்கள் அனைவரும் உடலை பெறுவதற்காக காத்திருக்கின்றனர் :

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் சொந்த ஊரான கோட்டைப்பட்டினம் வந்தடைந்துள்ளது. உடலை பெறுவதற்காக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ராகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன் ஆகியோர் வந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு சார்பில் உடலை பெற்று உடற்கூராய்வு செய்து கொலை செய்த இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டதும் அமைச்சர் ரகுபதி அங்கிருந்து கிளம்பிவிட்டார், பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை.

மீனவர் ராஜ்கிரணின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினரின் ஓலம்…

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது…

மீனவர் ராஜ்கிரணின் உடல் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அடக்கம் செய்வதற்காக நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது…

Leave a Reply