தோழர் கிளாரா செட்கின் பிறந்தநாளில் (05.07.1857) உலக அனைத்து பெண்களுக்கும் குரல் கொடுப்போம்

தோழர் கிளாரா செட்கின் பிறந்தநாளில் (05.07.1857) உலக அனைத்து பெண்களுக்கும் குரல் கொடுப்போம் – மே பதினேழு இயக்கம்

“முதலாளியவாதிகளுக்கு உழைக்கும் பெண்களின் மேல் அதீத ஆர்வம் இருப்பது ஏன்? மிக குறைந்த கூலிக்கு வேலை வாங்க முடியும் என்பது மட்டுமல்ல, பெண்களின் அதீத கீழ்ப்படியும் தன்மையுமே”

மேற்கூறிய பெண்களின் மீதான பொருளாதார சுரண்டலை பற்றி கூறிய தோழர் கிளாரா செட்கின் அவர்கள் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மார்க்சிய பொதுவுடைமைவாதி. பெண்களின் சம உரிமைக்காக இறுதிக்காலம் வரை போராடியவர்.

ஆசிரியராக பணிபுரிந்து வந்த தோழர் கிளாரா செட்கின் அவர்கள், தனது 21 வது வயதில் ஜெர்மன் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். 1907 ம் ஆண்டு ஜெர்மனி ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற முதல் ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நிகழ்வில் சர்வதேச பெண்களை ஒருங்கிணைக்கும் அமைப்பிற்கு செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் கிளாரா செட்கின் அவர்கள் ‘சர்வதேச மகளிர் தினத்தை ’ 08-மார்ச்-1910 லும், சர்வதேச சோசலிச பெண்கள் அமைப்பின் போர் எதிர்ப்பு மாநாட்டை 1915 ம் ஆண்டும் நடத்தினார்.

ஜெர்மனி புரட்சிக்குப் பின் உருவான ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மேலும் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு‍ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு செய்யலாற்றினார்.

தன் இறுதிகாலம் வரை அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்களின் சம உரிமைக்கு குரல் கொடுத்த தோழர் கிளாரா செட்கின் அவர்கள் பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply