தமிழ்நாடு அரசே! உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்திடு!

தமிழ்நாடு அரசே! உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்திடு! – மே பதினேழு இயக்கம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மக்களை காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அரசினால் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான சலுகைகளும், ஊக்கத்தொகையும், பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடும் அளிக்கப்படுகிறது. அதே போன்று, தமிழ்நாடு அரசு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஆகியோரை முன்களப்பணியாளர்களாக அறிவித்து, பிற முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்றின் போது மருத்துவ பணியாளர்களுக்கு பிறகு, விடுமுறை கூட எடுக்காமல் நாள்தோறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே. நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களும், மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் பணிபுரியும் தூய்மை காவலர்களும் நாள்தோறும் பணியில் ஈடுபட்டு சுற்றத்தை சுகாதாரத்துடன் பேணி வருவதால், நோய்த்தொற்று மேலும் பரவாமல் நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். கொரோனா பணி மட்டுமல்லாது, அனைத்து பேரிடர்களின் போதும், நேரங்காலம் பாராது உழைத்து நாட்டை மீட்டமைக்கும் முதன்மை பணியாளர்களாக இருந்துள்ளனர்.

கொரோனா தீவிரமடைந்த வேளையில், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்று தூய்மை பணிகளை மேற்கொள்தும், கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகளின் வீட்டுக்கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் பணியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டது கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதில் கொரோனா தொற்று காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். அப்படியாக பணியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளர்களுக்கு, அவர்கள் முன்களப்பணியாளர்களாக அங்கீகரிக்கப்படாத காரணத்தினால், மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை.

சமூகத்தினால் இழிவாக கருத்தப்படும் பணிகளை சமூக அக்கறையோடு உயிரை பற்றியும் கவலைப்படாது பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். குறைந்த ஊதியத்தில், ஊக்கத்தொகையும் பெறாமல், பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு போன்ற எதுவும் இல்லாமல் இவர்கள் ஆற்றும் பணி, முன்களப்பணியாளர்களின் பணிக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. எனவே தூய்மை பணி சார்ந்து பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது,

தமிழநாடு அரசு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஆகியோர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனில், அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய ஊக்கத்தொகையும், கொரோனா தொற்று காரணமாக பணியில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கும் அதே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டு அரசை கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010தமிழ்நாடு அரசே! உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்திடு! – மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply