கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம்

கொரோனா காலத்தில் மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டம் ஒரு மோசடி. உண்மை அம்பலம்.

2014லிருந்து இந்துத்துவ மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்திய பொருளாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ மோடி அரசு மொத்தப் பழியையும் கொரோனாவின் மேல் போட்டது. மூன்று கட்ட பொது முடக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரம் புதைந்தே போனது.

இந்தியாவெங்கும் ஆறுகோடி சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அதில் வேலை செய்த பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கை நிர்கதியானது. பலர் உயிரிழக்கும் சம்பவங்களும், பல தொழிலாளர்கள் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பல மையில்கள் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்த அவலமும் ஏற்பட்டது. இதனால் ஆளும் இந்துத்துவ மோடி அரசின் மீது மக்களின் கோபம் திரும்பியது. இதனை சரி கட்ட வேண்டி மோடி அரசு தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் 20 லட்சம் கோடி மதிப்பிலான ‘ஆத்மநிபார்’ என்ற திட்டத்தை நான்கு கட்டங்களாக அறிவித்தது. இதனை பெரிய சாதனையாக அனைத்து மாநிலங்களிலும் பரப்பியது.

தற்போது மோடி அரசு இந்தத் திட்டங்களில் மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அதாவது மோடி அரசு இதுவரை ஆத்மநிபார் திட்டத்தில் வெறும் மூன்று லட்சம் கோடி மட்டும்தான் ஒதுக்கியிருப்பதாகும், அதிலும் 1.20 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு கடனாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு திரும்ப வழங்க வேண்டுமாம். வெறும் மூன்று லட்சத்தை கொடுத்துவிட்டு 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதாகவும், இதன் மூலம் இந்திய பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது என்பது போலவும் தொடர்ந்து பொய்யை மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் திரும்ப திரும்ப சொல்லி 130 கோடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

ஏற்கனவே கொரோனா காலத்தில் பி.எம் கேர் என்கிற பெயரில் பல ஆயிரம் கோடிகளை சேர்த்துவிட்டு இன்று வரை அதற்கு கணக்கு காட்டாமல் இருப்பது ஒரு பக்கமும் என்றால், தற்போது 20 லட்சம் கோடி என்று அறிவித்து வெறும் 3லட்சம் கோடியை மட்டும் செலவழித்துவிட்டு 17லட்சம்கோடிக்கு கணக்கு காட்டாமல் நாட்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது.

அதோடு ஜிஎஸ்டி என்கிற பெயரில் மாநில மக்களிடம் அதிக வரியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கடன் வழங்கி மாநிலங்களையும் கடனாளி ஆக்கியிருக்கிறது.

130 கோடி மக்களை முட்டாளாக்கியது போதாதென்று மாநிலங்கள் என்ற ஜனநாயக தன்மையையும் இல்லாமல் செய்யும் ஆரிய இந்துத்துவ மோடி அரசின் முகத்திரையை கிழித்து
தமிழ்த்தேசிய இன உரிமையை மீட்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply