மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய GST இழப்பீட்டை கேட்டு வாங்காமல்,ஆர்.பி,ஐ மூலமாக தமிழக அரசு கடன் வாங்குவதா? தமிழ்நாட்டை கடனாளியாக்கும் வேலையை அதிமுக அரசே கைவிடு!

மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய GST இழப்பீட்டை கேட்டு வாங்காமல்,ஆர்.பி,ஐ மூலமாக தமிழக அரசு கடன் வாங்குவதா? தமிழ்நாட்டை கடனாளியாக்கும் வேலையை அதிமுக அரசே கைவிடு! மே 17 இயக்கம்

மாநில அரசின் வரி வாங்கும் உரிமையை பறித்து மொத்த வரி வருவாயையும் மத்திய அரசு பிடுங்கிகொண்டு செல்ல வாய்பாக ஜி.எஸ்.டி என்ற சட்டத்தை இந்துத்துவ மோடி அரசு கொண்டுவந்தது. அப்படி கொண்டுவரும்போது மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்திய அரசு ஏற்குமென்று வாக்குறுதி கொடுத்தே இந்த சட்டத்தை திணித்தது.

ஆனால் மாநில அரசுகளுக்கு வரவேண்டிய 92000கோடி பணத்தை இதுவரை தராமல் மத்திய அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இது குறித்து கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஜி,எஸ்.டி கவுன்சிலில் போர்கொடி தூங்கி போராடிக்கொண்டிருக்கிறது.

உண்மையிலேயே இந்த ஜி.எஸ்.டியால் அதிக பாதிப்பை சந்திக்கும் மாநிலம் என்பது தமிழகம் தான். ஆனால் அதிமுக அரசின் பதவி ஆசைக்காக உரிய இழப்பீட்டைக்கோரி போராடாமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. இதன்விளைவு ஒருவாரத்திற்கு முன்னால் இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் நிர்மலாசீதாரமன் எங்களால் மாநிலங்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டுத்தொகையை தரமுடியாது வேண்டுமென்றால் மாநில அரசுகள் ஆர்.பி.ஐ மூலம் கடன் பத்திரங்களை விற்று வருவாயை பெருக்கிக் கொள்ளுங்கள் என்று பச்சையாக துரோகமிழைத்து விட்டது.

இதற்கே காத்திருந்தது போல் இந்துத்துவ மோடி அரசின் அடிமைகளான 20மாநில அரசுகள் கடனை வாங்கி கொண்டது. இந்த வரிசையில் 21ஆவது மாநிலமாக தமிழக அரசும் இணைந்திருக்கிறது. இதன்மூலம் கடன் பத்திரங்களை வெளியிட்டு அதனை விற்று மாநில அரசுக்கு தேவையான நிதியை அதிமுக அரசு பெற்றுக்கொள்ளப்போகிறது.

நியாயமாக நமக்கு கிடைக்கவேண்டிய பணத்தை கேட்டுபெறாமல் மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செயது மாநில அரசின் கடனை சுமையை ஏற்றியிருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே கடனாளியாக இருக்கும் தமிழகம் இன்னும் மோசமான நிதிநிலையை நோக்கி நகரும்.

தனது அரசியல் பதவி ஆசைக்காக ஓட்டுமொத்த தமிழக மக்களையும் கடனாளியாக்கும் இந்த வேலையை அதிமுக அரசு கைவிட்டுவிட்டு ஒன்றிய அர்சிடமிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய உரிமையை கேரளா, மேற்குவங்கம் போல் போராடி பெறவேண்டும். மாநிலங்கள் ஒன்றும் இந்திய ஒன்றியத்திற்கு அடிமை சாசனம் எழுதிகொடுக்கவில்லை என்ற போர்க்குரல் எழுப்பிய தமிழ்நாட்டின் மரபை காக்கவேண்டுமென்று மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply