16பேர் கொண்ட ஆரிய ஆய்வுக்குழுவை ஏற்க மாட்டோமென்று கோவையில் BSNL அலுவலகம் முற்றுகை

பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தில் ஒற்றை ஆரிய கலாச்சாரத்தை நிறுவிட 12 ஆயிரம் ஆண்டு கால இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்துத்துவ மோடி அரசு K.N.தீக்சித் தலைமையில் 16பேர் கொண்ட ‘கலாச்சார ஆய்வுக்குழு’ ஒன்றை நிறுவியிருக்கிறது.

இந்த 16பேர் கொண்ட குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவரோ , பட்டியல் மற்றும் பழங்குடியினரோ, பெண்களோ, வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களோ, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களோ இப்படி யாரும் இல்லாமல் 8சமஸ்கிருத பண்டிதர்கள் 2 இந்துத்துவ அமைப்பில் உள்ளவர்கள் என்று ஆரிய கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பவர்களை வைத்து ஆய்வு செய்வோமென்றால் அது எப்படி நேர்மையானதாக இருக்கும்.

ஆகவே இந்த ஒருபக்க சார்பு ஆரிய ஆய்வுக்குழுவை ஏற்க மாட்டோமென்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள BSNL அலுவலகம் திராவிட பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பாக இன்று 30.09.20 மே17 இயக்கம் உள்ளிட்ட 21அமைப்புகளால் முற்றுகை இடப்பட்டது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply