புதிய கல்விகொள்கையின் உண்மையான நோக்கமும்; தமிழகத்தில் மறைமுக திணித்தலும்

புதிய கல்விகொள்கையின் உண்மையான நோக்கமும்; தமிழகத்தில் மறைமுக திணித்தலும்.

உலகம் முழுவதும் நல்ல கல்வியாளர்களை உருவாக்க புதிய புதிய கல்விமுறைகளை வடிவமைத்துக்கொண்டு இருக்க்கிறார்கள் ஆனால் இந்தியாவிலோ முதலாளிகளுக்கு தேவையான கூலியாட்களை உருவாக்கும் ஒரு கல்விமுறையை புதிய கல்விக்கொள்கை 2020 என்ற பெயரில் மத்திய மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்த கல்விக்கொள்கையில் கட்டாயமாக குழந்தை பருவத்திலிருந்தே இந்தியும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழ்,கன்னடம்,மராத்தி,தெலுங்கு உள்ளிட்ட தேசிய இன மொழிகளை அழிக்கும் வேலை நடக்கிறது. இதன் உச்சகட்டமாக குழந்தைகளுக்கு கல்வியை கொடுக்காமல் பள்ளிக்கூடத்திலிருந்து அவர்களை விரட்டி அவர்கள் பெற்றோர்கள் செய்த வேலையை அதாவது குலக்கல்வியை ஊக்கப்படுத்தும் கொடூரமும் கல்விக்கொள்கை என்ற பெயரில் நடக்கிறது.

இப்படிப்பட்ட மோசாமன ஒரு கொள்கையை கொண்ட கல்வியை இந்திய ஒன்றியத்தில் அமுல்படுத்தக்கூடாது என்று நாடெங்குமிருக்கிற கல்வியாளர்கள்,மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்து வருகிறார்கள். தமிழகம் இந்த எதிர்ப்பில் முன்னோடியாக இருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் மும்மொழிக்கொள்கையை ஏற்கமாட்டோமென்று அறிவித்தார்.

ஏற்கனவே புதிய கல்விக்கொள்கையில் உள்ள ஒவ்வொரு சரத்துகளாக தமிழகத்தில் சத்தமின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன, உதாரணமாக 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, காலைஉணவு திட்டத்தில் இஷ்கான் போன்ற குறிப்பிட்ட மதத்தை பரப்பும் தொண்டு நிறுவனங்கள், கிரமாப்புற பள்ளிகளை ஒன்றாக இணைப்பது இப்படி நடந்து கொண்டிருக்கும் சூழலில், கோவை மாநாகராட்சி அரசு பள்ளியில் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான படிவத்தில் ’இந்தியையும், குலக்கல்வியை சத்தமின்றி அறிமுகப்படுத்தும் வேலைகள் நடந்திருக்கிறது. (பார்க்க இணைப்பை).

தமிழக மக்களே!

புதிய கல்விகொள்கையை அறிமுகப்படுத்தினால் என்னவாகுமென்று தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. ஆகவே தமிழக மக்கள் இனியும் தாமதிக்காமல் இந்த சட்டத்தை எதிர்க்க ஓரணீயில் திரளவேண்டும். நம் அடுத்த தலைமுறையை கல்வியாளர்களாக பார்க்க வேண்டுமா? இல்லை அடிமைகளாக பார்க்க வேண்டுமா? என்று தமிழக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

தமிழக அரசே!

இந்தியா முழுவதும் இன்னும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தாத நிலையில் தமிழகத்தில் அதற்கான வேலையை எந்த அறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்றத்துடிப்பது தமிழர்களையும் தமிழையும் அவமானப்படுத்தும் செயல். உடனடியாக இந்த நட்வடிக்கையை தடுத்து நிறுத்தி புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்காது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply