சென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்

சென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்

நேற்று 10.08.2020 ஞாயிறு அன்று பிரதமர் மோடி சென்னையிலிருந்து அந்தமான் தீவு பகுதிகளுக்கு கடலுக்கடியில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் பேசிய மோடி அந்தமான் தீவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தான் இந்த திட்டம் எனது அரசால் இங்கு நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னார். அப்படியென்ன முக்கியத்துவம் வாய்ந்தது. இதை பற்றி ஏன் தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் வாருங்கள் பார்ப்போம். https://www.thehindu.com/news/national/andaman-and-nicobar-going-to-be-maritime-and-startup-hub-modi/article32310549.ece

புவிசார் அரசியல் களத்தில் அனைத்து நாடுகளின் கவனத்தையும் இழுத்து தன்னை பெரும் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கும் பகுதிதான் மலாக்கா நீரிணை. ஆசியா-பசிபிக் அல்லது இந்தோ – பசிபிக் என்று அழைக்கப்படும் பகுதியின் மையப்பகுதியே இந்த நீரிணைதான். இதுதான் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் என்ற தமிழர் பெருங்கடலை இணைகிறது.

சீனா, ஜப்பான், கொரியா தென்கிழக்காசிய நாடுகள் பயன்படுத்தும் வணிகப் பாதை தான் இந்த மலாக்கா நீரிணை. இதன் முனையத்திலிருந்து வடக்கு நோக்கி சங்கிலி போல் அமைந்திருக்கிறது அந்தமான் தீவுக் கூட்டம். நிக்கோபார் தீவுக்கு நேர் மேற்காக தமிழகத்தின் கடற்கரை அமைந்திருக்கிறது.

மேலும் இந்த நீரிணை வழியாகத் தான் உலக தேவையில் 40 விழுக்காடு எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. உலக உற்பத்தியில் 30 விழுக்காடு பொருட்கள் இந்த நீரிணையைக் கடக்கின்றன. ஆண்டுதோறும் 88,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன. இது 2017 ஆம் ஆண்டு கணக்கீடு. 2022-ல் இது 1,10,000 ஆக எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனா சப்பான் போன்ற நாடுகளின் எண்ணெய் தேவைக்காக தினமும் இந்த நிரிணை வழியாகத்தான் இந்நாடுகளின் கப்பல்கள் பயணப்படுகிறது. ஆகவே மேற்கண்ட நாடுகளை குறிப்பாக சீனாவை முடக்க இந்த நீரிணையை முடக்கினாலே போதும் அதுக்கு அந்தமான் நிக்கோபர் தீவுகளும் அந்த வழியாக வரும் கப்பல்களை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பமும் அதற்கு இணைய வசதியும் தேவை அதற்காகத்தான் இந்த அப்டி பைபர் கேபிள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிரிணைக்கு அருகில் இருக்கும் தமிழகம் தான் இந்த நிரிணையை பாதுகாக்க தேவையான அனைத்து கட்டமைப்புகள் உள்ள ஒரே இடம். தஞ்சாவூரில் சீரமைக்கப்பட்ட விமானத்தளம் என்பதும், இன்னும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பாதுகாப்பு படைக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற் நிறுவனங்களானாலும் சரி அனைத்தும் இதற்கு தான். ஆகவே இந்த நீரிணையை பாதுகாக்க வேண்டுமென்றாலும் சரி, அல்லது இங்கு ஆளுமை செலுத்தவேண்டுமென்றாலும் சரி தமிழ்தேசிய இனமான நமது ஒத்துழைப்பு தேவை என்பதிலிருந்து இந்த அரசியலை புரிந்துகொண்டால் மட்டுமே நாம் யார், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன மாதிரியான அரசியலை எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்பது தமிழர்களுக்கு புரியும்.

நாம் வலிமை குறைந்தவர்கள் இல்லை.
நமது வலிமையை அறியாதவர்கள்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply