பிஜேபி மோடியின் பி.எம் கேர் ஊழல் அம்பலம்

பிஜேபி மோடியின் பி.எம் கேர் ஊழல் அம்பலம்

கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்துபோயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபமென்கிற ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க நிதி தாருங்களென்று ஏற்கனவே இருக்கும் அரசு கணக்கை தவிர்த்துவிட்டு மோடி புதிய கணக்கில் நிதி கேட்டார். மேலும் இந்த கணக்கை தணிக்கை செய்யமுடியாதென்றும், எவ்வளவு பணம் வருகிறது என்ன செலவு செய்திருக்கிறோமென்ற கணக்கையும் காட்டதேவையில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தது மோடி அரசு. இந்த செயல்பாட்டை அப்போதே பலரும் இது ஊழலுக்குத்தான் வழிவகுக்குமென்று எச்சரித்தனர். இப்போது முன்பு சொன்னது போல பி.எம் கேரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. அதாவது

ஆகஸ்ட் 06’2020அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பி.எம்.கேர் நிதியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு 18,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வாங்கி அனுப்பப்பட இருக்கிறதென்றும் மொத்தம் 60,000வெண்டிலேட்டர்கள் இன்னும் சில மாதங்களில் உள்நாட்டிலேயே தயாரித்து கொடுக்கப்படுமென்றும் அதில் 50,000 வெண்டிலேட்டர்கள் பிஎம்.கேர் நிதியிலிருந்தும் 10,000வெண்டிலேட்டர் மத்திய அரசு நிதியிலிருந்தும் கொடுக்கப்படுமென்று அறிவித்தது. https://www.hindustantimes.com/india-news/indian-ventilators-will-be-geo-tagged-to-prevent-misuse-health-ministry/story-YelSyGN6mv8W56qCXlyJ4L.html

இந்நிலையில் முன்று நாட்களுக்கு பிறகு நேற்று ஆகஸ்ட் 09’2020இல் பிஜேபியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சொன்னதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் ”இன்று 50,000வெண்டிலேட்டர்கள் பி.எம்,கேர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்னும் 20,000வெண்டிலேட்டர் விரைவில் கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது”. (இணைப்பை 2ஜ பார்க்க)

அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பானசுகாதாரத்துறை 18,000வெண்டிலேட்டர்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லும்போது, பிஜேயின் தலைவர் ஏன் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிமாக்கி 50,000என்று சொல்ல வேண்டும்.அப்படியானால் மீதமிருக்கிற 32,000வெண்டிலேட்டர்கள் எங்கே? இதற்கான பணம் எங்கே? ஏற்கனவே 2.5லட்சம் பெருமானமுள்ள வெண்டிலேட்டர்களை 4லட்சம் கொடுத்து மோடி அரசு வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவது எதனால்? அதேபோல மொத்தமே 60,000 வெண்டிலேட்டர்கள் தான் என்று அரசு சொல்கிறது. ஆனால் பிஜேபியோ 70,000கணக்கு சொல்கிறது.

ஆக எப்படிப்பார்த்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலை பிஜேபி அரசு செய்திருக்கிறது என்பது மேற்கூறிய அவர்களின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடிகிறது. இதன் உண்மை தன்மையை அறிய பி.எம்.கேர் நிதியை உடனடியாக அரசின் வரம்பிற்குள் கொண்டுவந்து முறையான தணிக்கை செய்து உண்மையை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply