அரச வன்முறையால் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

அரச வன்முறையால் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம் காடுகளையும் மேடுகளையும் உழுது சீராக்கி தங்கள் இரத்தத்தை வேர்வையாக்கி உழைத்த மாஞ்சோலை தொழிலாளர்கள் தங்களுக்கு தினக்கூலியான எழுபது ரூபாயை நூறு ரூபாய் ஆக்க கோரியும், தங்களுக்கு சுகாதாரமான வாழ்விடங்களை வழங்கிடவும், மகப்பேறு விடுப்பு, இடைவேளைகள் கூடிய வேலை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரிக்கைகளாக முன் வைத்து போராடி வந்தனர்.அத்தகைய போராட்டத்தின் தொடர்ச்சியாக 23.07.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்க அமைதி பேரணி சென்றனர். இந்த அமைதி பேரணியின் போது திட்டமிட்டு அரசு காவல்துறையின் மூலம் கலவரத்தை நடத்தி ஒரு குழந்தை உட்பட 17 பேரை தாமிரபரணி ஆற்றில் முழ்கடித்து கொலை செய்த தினம் இன்றுதமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மக்கள் திரண்டு போராடும் போது அரசானது காவல்துறை மூலம் வன்முறையை பல்வேறு தருணங்களில் ஏவியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம், கூடங்குளம் போராட்டம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நம் முன்னே சான்றாக உள்ளது. இதை எதிர்த்து உரிமைக்காக நாம் ஒன்றுபட்டு சமரசமின்றி நிற்பதுவே மாஞ்சோலை நினைவுநாளில் நாம் சூளுரையாக ஏற்கவேண்டும்.இந்நாளில் காவல்துறையின் அரச வன்முறையை கண்டிப்பதோடு தாமிரபரணியில் கொல்லப்பட்ட 17 தோழர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துகிறதுமே பதினேழு இயக்கம்9884072010

Leave a Reply