தமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு தரப்பினரோடு உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்த தோழர் கோவை ஞானி தனது உரையாடலை நிறுத்திக்கொண்டார்

தமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு தரப்பினரோடு உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்த தோழர் கோவை ஞானி தனது உரையாடலை நிறுத்திக்கொண்டார்

தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் அதன் வரலாற்று பகைவர்களால் ஆபத்து சூழ்ந்திருக்கிற இந்த இக்கட்டான சூழலில், அதனை எதிர்த்து நம்மை ஒருமுகப்படுத்தி வழிநடத்தக்கூடிய ஆற்றலுடைய ஆளுமைகள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரிந்து செல்வது தமிழ்சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.அந்த வகையிலேதான் தமிழ்சமுகம் ஒரு பண்பட்ட சமுகமாக மாற தனது வாழ்நாளெல்லாம் அனைத்து தரப்பினரோடும் தனது உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்த கோவை ஞானி நேற்று காலை அவரது உரையாடலை நிறுத்திக்கொண்டார்.அவரது பேச்சு, எழுத்து அவர் நடத்திய சிற்றிதழ்கள் இவையனைத்தும் மானுட விடுதலையும் தமிழர்களின் முன்னேற்றம் குறித்த அவரது எண்ணத்தையும் வெளிப்படுத்தும். இதை இன்றைய தலைமுறை அவசியம் படிக்கவேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும். தமிழ் சமுகத்தின் மிக முக்கியமான ஒர் ஆளுமை அய்யா கோவை ஞானி அவர்கள். அய்யாவுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தோழர்கள் கோவை மேட்டுபாளையம் சாலையில் வி.ஆர்.வி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வீரவணகத்தை செலுத்தினார்கள்.மே 17 இயக்கம்9884072010

Leave a Reply