ஊடகவியலாளர்கள் தனி நபர்கள் குறி வைத்து மிரட்டப்படுவது குறித்த கட்டுரை

இன்று ஊடகவியலாளர்களை தனி நபர்கள் குறி வைத்து மிரட்டுவதையும், பெண் ஊடகவியலாளர்களை மிக மோசமாக சித்தரித்ததையும் நாம் காண்கிறோம். அவர்கள் யாராவது மேரி கால்வின் பற்றி தெரிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.!

லண்டனில் பிரித்தானிய செய்தி இதழில் பணி புரிந்த மேரி கால்வின், 2001ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் துணையுடன், வன்னியில் செய்தி சேகரிக்க சென்றார். அங்குள்ள தமிழ் மக்களின் மீது, இலங்கை அரசு மேற்கொண்ட போர், பொருளாதார தடை, உணவு மற்றும் மருந்துகள் தடுப்பு போன்ற செய்திகளை இடுப்பளவு நீர், சேறு , முட்கள் இவற்றை பொருட்படுத்தாது செய்தி சேகரித்தார்.

ஏப்ரல் 16 (2001) அன்று, அரை மைல் தொலைவில், இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் படுகாயமடைந்த மேரி கால்வின், பல மணி நேர போராட்டத்திற்குப்பின், தான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்து, அடிப்படை மருத்துவ உதவி பெறுகிறார்.ஆனால் இந்த தாக்குதலால், அவரது இடது கண்ணில் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

அவரது இரண்டாவது பயணம் 2009இல், வெள்ளைக் கொடி சம்பவத்திற்கு சாட்சியாக அமைகிறது.

இப்படியாக இருமுறை சர்வதேச சமூகத்திற்கு , தமிழீழப் படுகொலையின் முக்கிய சாட்சியானார்!

2012இல் சிரியாவில் செய்தி சேகரிப்பின்போது, குண்டு வீச்சில் உயிரிழந்தார்.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை பதிவு செய்த மேரி கால்வினின் அறம், துணிச்சல், நேர்மை எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வெளிச்சமாக அமையும்!!

முழு கட்டுரை பக்கம் 65👇👇👇
https://may17iyakkam.com/may17-kural-may-2020/

Leave a Reply