மே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு

மே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு

*****************************************************************************************

மே 17 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – இலங்கை தமிழினப் படுகொலையில் நீதிக்காக குரல் கொடுப்போம்!

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த கொடூர இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 17 அன்று தமிழின ஆதரவாளர்களாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது.

போரின் பெயரால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்த கொடூரமான செயல்கள், பாலியல் வன்மங்கள்; ஆட்கடத்தல்கள்; சித்திரவதைகள் என்ற மிகமோசமான அநியாயங்கள், அக்கிரமங்கள் இலங்கை இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்டன.

இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற குரல் உலகம் முழுவதும் தொடர்ந்து எழுப்பட்டு வருகின்றது. ஆயினும் உலக நாடுகளுக்கிடையேயான அரசியல் காரணமாக அந்த கோரிக்கைக்கு எதிராக பல்வேறு தடைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. எனினும் இலங்கை இனப்படுகொலைக்கு எப்படியேனும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், அதன் கொடூரங்களை தமிழர்கள் மறக்கவில்லை என்பதனை பறைசாற்றும் வகையில் மே.17 அன்று நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருபகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிறு அன்று, தமிழ் உணர்வாளர்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் இயங்கும் மே 17 இயக்கம் சார்பாக நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வில், இலங்கை தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியும் கலந்துகொள்ளும். இந்த ஆண்டும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் மே 17 இயக்கத் தோழர்களின் தோளோடு தோள் நின்று இலங்கை தமிழினப் படுகொலையில் நீதிக்காக குரல் கொடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு

நெல்லை முபாரக்
மாநில தலைவர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.

***************************************************************************************************

#மே_17_இயக்கம்_நடத்தும்_பதாகை_ஏந்தும்_நினைவேந்தலுக்கு_ஆதரவு!

#மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை!

இலங்கையில் நடைப்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு நீதி கேட்டு, மே-17 இயக்கம் வருடந்தோறும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இவ்வாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 17 அன்று மாலை 6 மணிக்கு பதாகை ஏந்தி அதை சமூக இணையத்தில் பதிவிடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்று மாலை 6 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் 5 நிமிடங்கள் பதாகை ஏந்தி தங்கள் உணர்வுகளை மஜக-வினர் வெளிப்படுத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
15.05.2020

**********************************************************************************************************

தமிழீழ இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசால் 2009இல் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மே 17 இயக்கத்தின் சார்பில் தமிழர் (மெரினா) கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதோடு, தமிழீழ தாயகத்தை வென்றெடுப்போம் என்கிற உறுதிமொழியும் எடுக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றால் இந்த ஆண்டு அப்படியான நிகழ்வு நடைபெற வாய்ப்பு இல்லாத காரணத்தினால், வருகிற ஞாயிற்றுக்கிழமை 17. 5. 2020 அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் அவரவர் வீட்டிலிருந்தே இறந்த மாவீரர்கள், இனப்படுக்கொலையில் இறந்த மக்களின் நினைவை ஏந்த மே 17 இயக்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருகிறது.

இந்த அழைப்பினை ஏற்று தமிழர் விடியல் கட்சி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்கிறது. தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் தனிமனித இடைவெளியினை கடைபிடித்து இனப்படுகொலைக்கு நீதி கோரி பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில், இதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag ஐ டுவிட்டர் இணையதளத்தில் 17/05/2020 அன்று காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக பதிவேற்றி அதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர் விடியல் கட்சி
8807090701.

***********************************************************************************************

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

*******************************************************************************************

நாளை மே 17 அன்று மாலை 6:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து பதாகை ஏந்தி விளக்கேற்றி வீரவணக்கம் செய்வோம்!

2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை கண்டித்தும் சர்வதேச பொது விசாரணைக்கும் தமிழீழ மக்களின் பொது வாக்கெடுப்புக்கும் வலியுறுத்தி பதாகை ஏந்தி ஒளிவிளக்கேற்றி இம்மண் விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகள், தம்பி பாலசந்திரன் இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மே 17 இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வந்துள்ளது.அந்த வகையில் தமிழர் கடல் கரையில் (மெரினா கடற்கரையில்) கடந்த சில ஆண்டுகளாக வீரவணக்க நிகழ்வை நடத்தவிடாமல் தமிழக அரசும் இந்திய அரசும் காவல் துறையும் தடுத்து வந்தது. இந்த வருடம் கொரான வைரஸ் தொற்று காரனமாக இருப்பதற்காக பொது ஊரடங்கு விதியை அமல் படுத்தி வைத்திருக்கிற இந்நிலையில் அவரவர் தனித்திருந்து விலகி இருந்து அவரவர் இல்லத்திலேயே நாளை மாலை விளக்கேற்றி நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி பதாகை ஏந்தி விளக்கேற்றி வீரவணக்கம் செய்ய வேண்டும் என விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய அனைத்து மட்டத்திலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் இச் செய்தியைப் படிக்கும் இம்மண் விடுதலையை ஆதரிக்கும் அனைவரும் செய்யும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குடந்தை அரசன்,
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

*************************************************************************************************************

ஈழத்தமிழ் இனப்படுகொலை;
11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்திடுவீர்!

வைகோ வேண்டுகோள்

ஈழத்தமிழ் இனப்படுகொலையை நினைகூறும் வகையில், ஆண்டுதோறும் மே திங்கள்17 ஆம் தேதியை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில், மே -17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சென்னை மெரினா கடற்கரையில் சுடர் ஏந்தி புகழ் அஞ்சலி நடத்துவது வழக்கம்.

கடந்த ஆண்டு அப்படி நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீதும், என் மீதும் மற்றும் மூவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா கொடும் தொற்றுநோய் காரணமாக அந்தப் புகழ் அஞ்சலி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த இயலாமல் போயிற்று.

ஆயினும் மே -17 இயக்கத்தினர் தங்கள் இல்லங்களிலேயே சுடர் ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், உணர்வாளர்கள் அவ்விதமே தங்கள் இல்லங்களில் மே-17 அல்லது மே 18 நாட்களில் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி நிகழ்ச்சியை நடத்திடுமாறு வேண்டுகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை -8
16.05.2020

*************************************************************************************************

மே 17 இயக்கம் சார்பாக நாளை மாலை 6 மணியளவில் நடைபெறும் தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்ப்புலிகள் கட்சி பங்கெடுக்கும் என அதன் தலைவர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

*********************************************************************

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

2009 ம் ஆண்டு மே மாதம் தமிழீழத்தில் சர்வதேச நாடுகள் உதவியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது .

நாளை 17.05.2020 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத்தோழர்கள் மெழுவர்த்தி ஏந்தி தங்களின் படங்களை முகநூலில் பதிவு செய்வதின் மூலம் நாம் இன அழிப்பிற்கு நீதிவேண்டும்,
தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

மே 17 இயக்கம் முன்னெடுக்கும் இந்த இணையதள நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்கும் தமிழின உணர்வாளர்களோடு திராவிடர் விடுதலைக் கழகம் கரம் கோர்த்து நிற்கிறது.

ஹேஷ் டேக்
#Justice4TamilGenocide
மற்றும்
#Referendum4TamilEelam

**********************************************************************************************

மே 17 இயக்கம் சார்பாக நடைபெறும் தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், திராவிட தமிழர் கட்சி பங்கெடுப்பதாக அதன் தலைவர் தோழர் வெண்மணி அவர்கள் அறிவித்துள்ளார்.

**************************************************************

*மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!*

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறமாகக் கூடி தமிழீழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதனை தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாக மாற்றும் வண்ணம் மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை ஒருங்கிணைத்து நடத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு நாம் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தனித்து இருப்பதன் காரணத்தினால் நம் நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிட இயலாது. நமது எண்ணங்களும், கண்ணீரும், உரிமை முழக்கங்களும் கூடுவதற்கு எந்தப் பேரரசும், எந்தப் பெருந்தொற்றும் தடை போட்டு விட முடியாது.

எத்தகைய சூழல் வந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற உரிமைக் குரலை இந்திய அரசுக்கும், உலக ஏகாதிபத்தியங்களுக்கும், இனவெறி இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவில்லை என்பதனை பறைசாற்ற வரும் மே 17, 2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டில் இருந்தபடியே, தனிமனித இடைவெளியினை கடைபிடித்து நினைவேந்தலை மேற்கொள்வதற்கான அழைப்பினை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக விடுக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.

மாலை 6:30 மணியளவில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்துடன் சேர்ந்து நம் தமிழினப் போராளிகளுக்கும், மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ மக்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் தங்களின் புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இச்செய்தியினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ட்விட்டர் இணையதளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் தாங்கள் பங்கெடுத்து வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

****************************************************************************************

தோழர் பொழிலன் அறிக்கை:

சூளுரையோடு நினைவேந்துவோம்!

2009 முள்ளிவாய்க்கால் கொடும் நிகழ்வு ஈழத்தமிழர்களின் வாழ்வையே அழித்திருக்கிறது…!

ஓர் இன அழிப்பை உலகமே வேடிக்கை பார்த்தது..!

இந்தியத்திடம் அடிமைப்பட்ட
தமிழகம் காலத்தைக்
கைவிட்டுவிட்டது!!

தமிழீழ விடுதலைக்கு ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்கு
ஆதரவளிப்பதும்
துணை நிற்பதும்
தமிழக மக்களின் கடமை!

தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் இந்திய, சிங்கள வெறி அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புவோம்!

2009 முள்ளிவாய்க்கால் ஈகியர்களின் நினைவேந்தி இல்லங்களின் முன்பு
மே17 – ஆகிய இன்று
மாலை 6 மணியளவில்
விளக்கேற்றுவோம்!

வெல்க தமிழீழம்!
வெல்க தமிழ்த்தேசம்!

************************************************************************************

மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில், தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையிலான தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து பங்கெடுப்பதாக தெரிவித்துள்ளது. தமிழீழ இனப்படுகொலை நீதிக்காக குரல் கொடுக்கும் தோழர் அரங்க குணசேகரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

*மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!*

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறமாகக் கூடி தமிழீழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதனை தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாக மாற்றும் வண்ணம் மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை ஒருங்கிணைத்து நடத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு நாம் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தனித்து இருப்பதன் காரணத்தினால் நம் நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிட இயலாது. நமது எண்ணங்களும், கண்ணீரும், உரிமை முழக்கங்களும் கூடுவதற்கு எந்தப் பேரரசும், எந்தப் பெருந்தொற்றும் தடை போட்டு விட முடியாது.

எத்தகைய சூழல் வந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற உரிமைக் குரலை இந்திய அரசுக்கும், உலக ஏகாதிபத்தியங்களுக்கும், இனவெறி இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவில்லை என்பதனை பறைசாற்ற வரும் மே 17, 2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டில் இருந்தபடியே, தனிமனித இடைவெளியினை கடைபிடித்து நினைவேந்தலை மேற்கொள்வதற்கான அழைப்பினை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக விடுக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.

மாலை 6:30 மணியளவில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்துடன் சேர்ந்து நம் தமிழினப் போராளிகளுக்கும், மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ மக்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் தங்களின் புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இச்செய்தியினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ட்விட்டர் இணையதளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் தாங்கள் பங்கெடுத்து வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

********************************************************************************************

மே பதினேழு இயக்கம் சார்பாக இன்று முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில், தோழர் தீபக்நாதன் அவர்களின் டிசம்பர் 3 இயக்கமும், தோழர் சௌ.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கழகமும், கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து பங்கெடுப்பதாக தெரிவித்துள்ளது. தமிழீழ இனப்படுகொலை நீதிக்காக குரல் கொடுக்கும் தோழர் தீபக்நாதன் அவர்களுக்கும், தோழர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

*********************

*மே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!*

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறமாகக் கூடி தமிழீழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதனை தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாக மாற்றும் வண்ணம் மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை ஒருங்கிணைத்து நடத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு நாம் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தனித்து இருப்பதன் காரணத்தினால் நம் நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிட இயலாது. நமது எண்ணங்களும், கண்ணீரும், உரிமை முழக்கங்களும் கூடுவதற்கு எந்தப் பேரரசும், எந்தப் பெருந்தொற்றும் தடை போட்டு விட முடியாது.

எத்தகைய சூழல் வந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற உரிமைக் குரலை இந்திய அரசுக்கும், உலக ஏகாதிபத்தியங்களுக்கும், இனவெறி இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவில்லை என்பதனை பறைசாற்ற வரும் மே 17, 2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நாம் ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டில் இருந்தபடியே, தனிமனித இடைவெளியினை கடைபிடித்து நினைவேந்தலை மேற்கொள்வதற்கான அழைப்பினை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக விடுக்கிறோம்.

ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.

மாலை 6:30 மணியளவில் வீட்டில் விளக்கேற்றி குடும்பத்துடன் சேர்ந்து நம் தமிழினப் போராளிகளுக்கும், மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழீழ மக்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் தங்களின் புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இச்செய்தியினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ட்விட்டர் இணையதளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் தாங்கள் பங்கெடுத்து வெற்றியடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

****************************************************************************************
தோழர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக நன்றிகள். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்க அனைவரும் கைகோர்ப்போம். தமிழினப்படுகொலைக்கான நீதியை வென்றெடுப்போம்.

Leave a Reply