தமிழீழ இனப்படுகொலைக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல்!

கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழீழத்தில் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் தமிழர் கடலாம் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி, இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறுவது வழக்கம். தற்போது நிலவும் கடுமையான சூழலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, மே 17 அன்று மாலையில் வீடுகளில் இருந்தபடியே நினைவேந்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரோடு மே 17 அன்று மாலை 6 மணி முதல் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போதிய இடைவெளியில் நின்றவாறு முழக்கமிடுவோம். மாலை 6:30 மணியளவில் மெழுகுவர்த்தியை பற்றவைத்து நினைவேந்தலை கடைபிடிப்போம்.

தமிழீழத்தில் ஐநா முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும்!

தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
தமிழீழ இனப்படுகொலையை நினைவேந்துவோம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply