கொரனொ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மோடி அரசு அறிவித்த நலத்திட்டம் ஏமாற்று வேலை – பாகம் 1

கொரனொ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மோடி அரசு அறிவித்த நலத்திட்டம் ஏமாற்று வேலை – பாகம் 1

கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் திடுதிப்பென மோடி அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை போட்டுவிட்டது. இதனால் யாரும் பாதிப்படையக்கூடாது என்பதற்காக மத்திய நிதியமைச்சர் கடந்த மார்ச் 26’2020 அன்று 1.7லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்களை அறிவித்தார்.

இந்த திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையிலுள்ள திட்டங்கள் என்றும் அதையே ஏதோ புதிய திட்டங்கள் போல அறிவித்து நாட்டுமக்களை ஏமாற்றியிருக்கிறது மோடி அரசு என்று இந்தியாவிலுள்ள 635 பொருளாதார வல்லுநர்கள் அரசுக்கு விரிவான அறிக்கை அளித்திருக்கிறார்கள்.பார்க்க https://www.indiaspend.com/…/Response-to-covid19-relief-pac… . மோடி அரசு எந்தெந்த துறையில் எப்படி எப்படியெல்லாம் நாட்டு மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பார்ப்போம்.

முதலில் வருங்கால வைப்பு நிதியின் கீழ் தொழிலாளர்கள் 75%க்குமான பணத்தை எடுத்துக்கொள்ளலாமென்ற அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்வோம். அரசு ஏதும் நிவாரணம் கொடுக்கவில்லை தொழிலாளர்களின் பணத்தை எடுத்துக்கொள்ளும் அனுமதியை மட்டுமே கொடுத்திருக்கிறது. இது எப்படி நிவாரணமாகும்.

மேலும் நாம் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் அதாவது ஒரு தொழிற்சாலை மூடப்பட்டலோ அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் திறக்கப்படாவிட்டாலோ பி.எப் பணத்தில் 100% தொகையையோ அல்லது தொழிலாளர்களுக்கு வேறு வேலை கிடைக்காமல் இருந்தால் 75% தொகையையோ எடுத்துக்கொள்ளலாமென்பது ஏற்கனவே இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டத்தில் இருப்பது தான். இதை ஒரு அமைச்சர் நிவாரணமாக அறிவித்திருப்பது என்பது எவ்வளவு பெரிய மோசடி. சரி அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்காவது அவர்களின் பி.எப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் அமைப்பு சாராத தொழிலாளர்களின் கதி அவர்களுக்கு என்ன நலத்திட்ட உதவிகளை இந்த அரசு வழங்கியிருக்கிறது.

அடுத்து வேலையில்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் முதலாளிகள் தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பி.எப் பணத்தை பிடித்தம் செய்ய வேண்டாம். மூன்று மாதங்களுக்கு அதனை அரசே கட்டுமென்று ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார் நிதியமைச்சர். பார்க்க இது நலத்திட்டம் மாதிரி தெரியும். ஆனால் இதிலும் இந்த மோடி அரசு ஒரு சூட்சமத்தை வைத்திருக்கிறது. அதாவது 100க்கும் குறைவான ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அறிவித்திருக்கிறது. இதை ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது வெளிப்படையாக சொல்லவில்லை. இந்தியாவில் 100க்கும் குறைவான தொழிலாளர்கள் உள்ளவர்கள் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6% தான் என்று மார்ச் 27’2020 அன்று வெளிவந்த பிசினச் ஸ்டேண்டர்டு பத்திரிக்கை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது பார்க்க https://www.business-standard.com/…/only-about-16-of-epf-su…

ஆக இந்த நலத்திட்ட உதவிகளால் ஒரு புண்ணியமும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மாநிலங்களிலிருந்து வரும் வரிவருவாயை முழுதாக தனதாக்கிக் கொண்டு மாநிலத்திலுள்ள தொழிலாளர்களை இந்த பேரிடர் காலத்திலும் ஏமாற்றும் வேலையை செய்யலாமா? இதை மறைக்கத்தான் கைதட்டுங்கள் விளக்கு ஏந்துங்கள் என்ற கோமாளித்தனத்தை திணிக்கிறார்கள். நாமும் நமக்கு இழைக்கப்படும் கொடுமையை பற்றித்தெரிந்துகொள்ளலாமல் இஸ்லாமிய வெறுப்பிலும் கோமாளித்தனத்திலும் இருக்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply