மத்திய அரசே! தொழிலாளர் வைப்பு நிதி (பிஎஃப்) வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடு

மத்திய அரசே! தொழிலாளர் வைப்பு நிதி (பிஎஃப்) வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடு -மே 17 இயக்கம்.

கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் தனது கடைசி காலத்தில் சிரமமின்றி வாழ்க்கையை நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் தொழிலாளர் வைப்பு நிதி பிஎப் திட்டம்.

இந்தத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் ஊதியத்தில் ஒரு பங்கும், அரசு ஒரு பங்குமாக செலுத்தும். இப்படி செலுத்தப்பட்ட பணத்திற்கு வருடத்திற்கு இவ்வளவு என்று ஒரு வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும். இதை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது மத்திய அரசு.

இப்போது இந்த வட்டி விகிதம் 8.65% இருக்கிறது. இதை 8.5% குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. அதாவது தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தில் 18 லட்சம் கோடியை அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இதில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் கம்பெனி மற்றும் ஏ எல் அண்ட் எப்எஸ் என்ற இரண்டு நிறுவனத்தில் 4,500 கோடி அடங்கும். மேற்சொன்ன இரண்டு நிறுவனங்களும் தற்போது திவாலாகி விட்டது. ஆகவே தொழிலாளர்களின் பணம் 4,500 கோடி காந்தி கணக்கில் சேர்க்கும் நிலை ஏற்படிருக்கிறது. இதை காரணம் காட்டித்தான் வட்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவானது பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் கைவைக்கும் நடவடிக்கையாகும். ஏற்கனவே மத்தியில் மோடி அரசு வந்தபின்பு தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வட்டி விகித குறைப்பு மேலும் தொழிலாளர்களின் வாழ்வை நிர்மூலமாகி விடும். எனவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply