தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு

தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தஞ்சாவூரில் அதிநவீன விமானப்படை தளத்தை தொடங்கி இருக்கிறோம் என்று முப்படையின் கூட்டு தலைவர் பிபின் ராவத் பேசியிருக்கிறார். https://www.thehindu.com/news/national/tamil-nadu/sukhoi-squadron-positioned-in-thanjavur/article30607625.ece

உண்மையில் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் ஒருசில கேள்விக்கு பிஜேபியின் மோடி அரசு தமிழர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.அதாவது

1.இந்தியாவிற்கு சீனா தான் எதிரி நாடு என்றால் எதிரி நாடான சீனாவிற்கு அதிக நன்மையை தரும் பொருளாதார ஒப்பந்தமான ரீஜினல் எக்னாமிக் பார்ட்னர்ஷிப் அக்ரிமென்டில் கையெழுத்திட ஏன் இந்தியா முதலில் (இறுதியில் கையெழுத்துபோடவில்லை என்பது வேறு விசயம்) ஒப்புக்கொண்டது.

2. சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க தான் தமிழகத்தின் தஞ்சாவூரை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் ஏன் சீன பிரதமரை அதே தமிழகத்தில் மகாபலிபுரத்தில் வைத்து சந்தித்தீர்கள்? அவ்வளவு தூரம் அரசியல் அறிவு இல்லாதவர்களால் பிஜேபியின் வெளியுறவு கொள்கை யாளர்கள்.

3. சீனாவின் பொருளாதாரத்தை முடக்கினால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து இந்திய பெருங்கடலில் அவர்களை கண்காணிக்கவே இந்த விமானதளமென்றால், ஏன் இந்தியாவின் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்த சீனாவின் ’ஹவாய்’ கம்பெனிக்கு அனுமதி கொடுத்தீர்கள். அத்தோடு சில தினங்களுக்கு முன் சீனாவின் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் ’வின்டெக்’ நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க அனுமதியையும் மத்திய மாநில அரசுகள் வழங்கியிருக்கின்றது.

இதன் மூலம் சீனா இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார நன்மையை அடையப் போகிறார்களே. நீங்களே சீனாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறார்கள் பின் அதை கட்டுப்படுத்தவும் செய்வோம் என்கிறீர்களே ஏன் இந்த இரட்டை நிலை? உண்மை என்ன?

இப்படிப்பட்ட மிக முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் தமிழகத்தை ராணுவ மயமாக்கும் வேலையை ஏன் செய்கிறீர்கள். யாருடைய நன்மைக்காக செய்கிறீர்கள் என்பதை தமிழர்களுக்கு இந்திய அரசு சொல்லியாக வேண்டும்.

தமிழகத்தை ஆப்கானிஸ்தானாக மாற்ற இந்திய அரசு நினைக்கிறதோ என்ற அச்சம் தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply