இந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி

இந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி

ஒரு நாட்டின் இராணுவம் என்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதனால் தான் இராணுவத்தையும் அதில் பணியாற்றுகிற இராணுவ வீரர்களையும் உயர்வான இடத்தில் வைத்து மதிப்பார்கள். ஆனால் பிஜேபி அரசு 2014இல் பதவியேற்றதலிருந்து இராணுவத்தையும் இராணுவ வீரர்களையும் உதாசீனப்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கே உலைவைக்கிற வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. உதாரணமாக

இராணுவத்தில் அந்நிய மூதலீடை புகுத்தியது, இராணுவ உபகரணங்கள் தயாரிப்பதை தனியாருக்கு தாரை வார்த்தது, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு பென்சனை திட்டத்தை மாற்றியமைத்தது என எண்ணெற்ற துரோகத்தை இராணுவத்திற்கும் இராணுவ வீரர்களுக்கும் செய்த மோடி. இப்போது அவரது நண்பர் அதானிக்காக சுமார் 45,000கோடி மதிப்பிலான இந்திய கப்பல் படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிகப்பல் தயாரிக்கும் வேலையை எவன் அப்பன் வீட்டு சொத்தோ என்ற நினைப்பில் அள்ளி கொடுத்திருக்கிறார்.

சங்கிகள் கேட்கலாம் Larsen & Toubro Limited, Reliance Naval and Engineering போன்ற கம்பெனிகளும் தனியார் தானே இவர்கள் செய்யும் போது ஏன் அதானிக்கு கொடுத்ததை மட்டும் வேண்டுமென்றே பெரிதாக்குகிறீர்கள் என்று, பிரச்சனை அதுவல்ல ’அதானி டிபென்ஸ் ஜே.வி’ கம்பெனி இதுவரை ஒரு கப்பலைக்கூட தயாரித்ததில்லை. கப்பல் கட்டும் தொழிலில் முன்னனுபவமே இல்லாத ஒரு நிறுவனத்துக்கு தான் இந்திய இராணுவத்திற்கான நீர்முழ்கி கப்பல் தயாரிக்கும் உரிமையை மோடி கொடுத்திருக்கிறார். இதே போலத்தான் போர் விமானம் தாயரிப்பில் எந்த அனுபவமில்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் விமானம் தயாரிக்கும் பணியை பொதுத்துறை நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு கொடுத்தார். இப்போதும் அதே வேலையை தான் செய்திருக்கிறார். அதோடு

ஏற்கனவே அதானி குழுமத்தை ’இந்திய இராணுவ தளவாட கொள்முதல் குழு’ கப்பல் கட்டும் தூறையில் அனுபவமில்லை என்று நிராகரித்திருந்தது. அதனை மீறி மோடி இந்த ஒப்பந்தத்தை அதானிக்கு கொடுத்திருக்கிறார். அதோடு இதுபோன்ற திட்டங்களில் பங்கெபெறும் நிறுவனம் A அல்லது A+ தகுதியுடையதாக இருக்கவேண்டும். ஆனால் அதானி குழுமமோ ‘BBB’ தகுதி கொண்டது. அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தை பல்வேறு விதிமீறலை செய்து கொடுத்திருக்கிறது பிஜேபி அரசு.

இப்படி அப்பட்டமாக பிஜேபியின் மோடி அரசு அதானிக்காக இந்திய மக்களின் பாதுகாப்பை கேள்வி குள்ளாக்கியிருக்கிறது. இவ்வளவு மோசமான பிஜேபி தான் எந்த பிரச்சனை எடுத்தாலும் தேசபக்தி, எல்லையில் இராணுவ வீரர்கள் என்று சாத்தான் வேதம் ஓதியதை போல பேசும். உண்மையில் பிஜேபியும் அதனை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸிம் தான் இந்த நாட்டில் தேசவிரோதிகள்.

https://scroll.in/…/bjp-government-favouring-adanis-defence…

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply