பாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும்

பாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும்.

கடந்த ஜீலை மாதம் பாராளுமன்றத்தில் அவசர கதியில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை மோடி அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. அதில் முஸ்லீம் பெண்களை( சபரிமலையில் இந்து பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கும் கூட்டம்) பாதுகாக்கின்றோமென்கிற பெயரில் ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த அவசர கதி சட்டத்தை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்த்ததோடு, இந்த மசோதாவை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி பல்வெறு தரப்பினரின் கருத்தை அறிந்து அதன்பின் தாக்கல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதன் மீது பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

”இந்த சட்டம் குறித்து சம்பந்தபட்ட துறைகள் உள்துறை அமைச்சகம், சிறுபான்மை விவகார அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் பாதிக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்ட பின்னரே இந்த சட்டத்தை நிறைவேற்றுகிறோம் ஆகவே இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்பத்தேவையில்லை என்று அறிவித்து முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019, சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தகவல் உரிமைகள் அறியும் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சகம் ”இந்த சட்டத்தின் அவசர தேவை கருதி சம்பந்தப்பட்ட துறைகளிடம் கருத்து கேட்பதை தவிர்த்திருக்கின்றோம் என்று பதில் அளித்திருக்கிறார்கள். (பார்க்க இனைப்பு படத்தை)

ஆக இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லியிருக்கிற நெறிமுறைகளுக்கு மாறாக பொய்யான காரணம் சொல்லி ஒரு மசோதாவை சட்டமாக மோடி அரசு தனது சுயநல அரசியல் நோக்கத்திற்காக நிறைவேற்றியிருப்பது இதன் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

ஆகவே அரசியலமைப்பு சட்டத்தை மீறியதற்காகவும், பாராளுமன்றத்தில் தவறான தகவல் சொல்லி மோசடியாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருப்பதற்காகவும் மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

நன்றி The Wire இணையதளம். https://thewire.in/g…/triple-talaq-bill-law-ministry-consult

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply