அரசு மருத்துவமனையும், அரசு மருத்துவ கல்லூரியையும் இழுத்து மூட முயலும் மோடி அரசின் சதிதிட்டம்:

அரசு மருத்துவமனையும், அரசு மருத்துவ கல்லூரியையும் இழுத்து மூட முயலும் மோடி அரசின் சதிதிட்டம்

பிஜேபியின் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து பல்வெறு மக்கள் விரோத நடவடிக்கைகளை வரிசையாக செய்துவருகிறது. அந்த வகையில் ஏழைகளை கடுமையாக பாதிக்கும் ரேசன் கடைகளை இழுத்து மூடும் திட்டத்திற்காக அடுத்ததாக அரசு மருத்துவமனைகளை இழுத்துமூடும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள்.

புத்தாண்டை தினமான நேற்று (01.01.2020) அன்று மத்திய அரசிற்கு ஆலோசனை மற்றும் திட்டங்களை தயாரித்து அளிக்கும் முக்கியமான துறையான நிதி ஆயோக் 245 பக்கம் கொண்ட’அரசு மருத்துவ கல்லூரியை தனியாருக்கு’ தாரை வார்க்கும் ஒரு மாதிரி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. https://niti.gov.in/sites/default/files/2019-12/ModelConcessionAgreement-forSetting-upMedical-Colleges-under-Public-private-Partnership-Draft-for-Comments.pdf. இந்த மாதிரி அறிக்கையில்

1.அரசு மருத்துவமனையில் 750படுக்கை வசதிகள் இருந்தால்,அதில் பாதி படுக்கையுள்ள நோயாளிகளுக்கு அரசின் வழி காட்டுதலில் வைத்தியமும், மீதி பாதி இருக்கிற படுக்கையை ’மார்க்கெட் விலையில்’ அதாவது தனியார் மருத்துவமனையில் வாங்கும் கட்டணத்திற்கு வைத்தியம் பார்க்கப்படும்.

2.மார்க்கெட் விலையில் வைத்தியம் பார்க்கும் படுக்கைகளை தனியார் மருத்துவமனைகளே நிர்வகித்துக்கொள்ளலாம்.

3.இப்படி அரசு மருத்துவமனையை பிரிப்பதால் அரசு மருத்துக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிராக்டிக்கல் பயிற்சி எடுக்க சிரமம் ஏற்படும் என்பதை கவனித்தில்கொண்டு, அரசு மருத்துவ கல்லூரியையும் தனியாருக்கு கொடுத்துவிடலாம். அப்படி கொடுத்தால் அவர்கள் மாணவர்களுக்கு அவர்களே பயிற்சி அளித்துக்கொள்வார்கள்.

இப்படியாக அரசு மருத்துவமனைகளையும் அரசு மருத்துவ கல்லூரியையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சதித்திட்டத்தை மோடி அரசு மேற்கொள்கிறது.

இந்த சதி மட்டும் நிறைவேறுமானால் இந்தியாவில் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் ஏன்னெறால் இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளும், அதிக 1955 அரசு மருத்துவமனைகளையும் வைத்திருக்கின்றோம்.

ஏற்கனவே மருத்துவத்திற்கு நீட் எனும் மனுநீதி தேர்வை கொண்டுவந்து மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாபோன்ற கிராமப்புற மாணவர்களை கொலை செயத மோடி அரசு. இப்போது அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடி ஒட்டுமொத்த ஏழைகளையும் கொல்ல நினைக்கிறதா?

Leave a Reply