குடியரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடை

குடியரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் இன்று (20-12-2019) மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்திருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கிறார்கள்.

காவிகள் கலவரம் செய்வதை போராட்டமாகவும், மக்கள் உரிமைக்காக போராடுவதை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவும் தமிழக அரசு சித்தரிக்க முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும்.

ஆம்புலன்ஸ் செல்லும் முக்கிய சாலை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி கோரப்பட்ட இடம் என்பது காவல்துறையினால் ஆர்ப்பாட்டம் நடத்துவதெற்கென்று ஒதுக்கப்பட்ட இடமே ஆகும்.

பாஜகவினர் போராட்டம் நடத்துவதற்கு மட்டும் தமிழகம் முழுதும் பல இடங்களில் எந்த தடையுமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் விரோத பாஜக அரசின் விருப்பத்திற்காக, பொய்யான காரணங்களைக் கூறி தமிழக அரசு மக்கள் உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.

காவல்துறையின் தடையின் காரணமாக இன்று (20-12-2019) நடைபெற இருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply