ஈழத்தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டம்

ஈழத்தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டத்திருத்த நகல் எரிப்பு போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களின் ஒருங்கிணைப்பில், இன்று (12-12-19) மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் எதிரில் (மவுண்ட் ரோடு தர்ஹா அருகில்) நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன், இயக்குநர் வ.கௌதமன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் எண்ணற்ற தோழர்களோடு பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply