இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை

இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து இன்று 28-11-2019 மாலை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதித்திருக்கிறது.
இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்று அறிக்கை அளித்திருக்கிறார்கள்.

இதே அதிமுக-வின் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு அரசுதான் இலங்கை அரசு இனப்படுகொலை செய்த அரசு என்றும், ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அரசின் அதிகாரிகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மீறி, கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இலங்கையுடனான உறவை பாதிக்கும் என்று சொல்லி தடை விதித்திருக்கிறது எடப்பாடி அரசு. அப்படியென்றால் சட்டமன்றத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது? யாருக்கு வேலை செய்கிறது எடப்பாடி அரசு?

பாகிஸ்தானுடன் உறவை முறிக்க சொல்லி போராட்டங்கள் நடக்கும் போதெல்லாம் நாடுகளுக்கிடையேயான உறவு பாதிப்பதை பற்றி பேசாத இவர்கள், தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனும் போது மட்டும் உறவு பற்றிப் பேசுவது ஏன்? தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் கண்ணீர் விடுவதைப் போன்று அதிமுக உறுப்பினர்கள் நடித்தது எதனால்?

இன்று மாலை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் அனுமதி மறுப்பின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி மே பதினேழு இயக்கம் உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply