மே 17 இயக்கம் குறித்து ‘23.11.19 முரசொலி பத்திரிக்கையில்’ வந்த செய்திக்கு மறுப்பு

மே 17 இயக்கம் குறித்து ‘23.11.19 முரசொலி பத்திரிக்கையில்’ வந்த செய்திக்கு மறுப்பு

சமீபத்தில் சோனியாகாந்திக்கு இந்திய அரசு வழங்கி வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை இரத்து செய்தது சம்பந்தமான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய திமுகவின் டி.ஆர்.பாலு அவர்கள் ’புலிகளால் சோனியா காந்தி குடும்பத்திற்கு ஆபத்து இருக்கிறதென்று மத்திய அரசின் மே 14 ஆம் தேதி அறிக்கை சொல்லும்போது’ எப்படி பாதுகாப்பை விலக்கியிருக்கிறீர்கள் என்று கேட்டது தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. அதை ஒட்டி மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும் டி.ஆர்.பாலு அவர்களின் பேச்சுக்கு தனது கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதனை மறுக்கும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திதாளான முரசொலியில் 23.11.19 ’திருமுருகன் காந்திக்கு ஏன் இந்த அவசரம்?’ என்று ஒரு கேள்வியோடு எழுதியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே டி.ஆர்.பாலு அவர்கள் பேசிய காணொளி இன்றும் இணையதளங்களில் கிடைக்கிறது. https://youtu.be/_Dx77cAhqeU அதில் 0.40நிமிடத்திலிருந்து 1.10நிமிடம் வரை அவர் பேசும் பேச்சில் தெளிவாக இப்படி சொல்கிறார். ”சோனியாகாந்தி அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதைத்தான் மத்திய அரசு மே’14 ஆம் தேதி கொடுத்த அறிக்கையும் சொல்கிறது என்று சொல்லிவிட்டு. மத்திய அரசின் அறிக்கையை படிக்கிறார். அதில் விடுதலைபுலிகளால் சோனியாகாந்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆபத்து இருக்கிறது. பின் ஏன் பாதுகாப்பை இரத்து செய்தீர்களென்று தான் கேட்கிறாரே ஒழிய.”

முரசொலி பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிற படி ”புலிகளால் சோனியாகாந்தி குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சொல்லித்தானே புலிகளின் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்தது. இப்போது சோனியா குடும்பத்தினருக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஏன் நீக்கியுள்ளீர்கள்” இப்படி ஒரு இடத்தில் கூட புலிகள் மீதான தடை குறித்தெல்லாம் டி.ஆர்.பாலு அவர்கள் பேசவேயில்லை என்பது தான் உண்மை.

மே17 இயக்கம் எழுப்பிய இந்த கேள்வி என்பது அவதூறு நோக்கிலோ அல்லது வசவுகளுக்காகவோ அல்ல, மாறாக எமது கேள்வி அரசியல் சித்தாந்தம் சார்ந்தது. அரசியல் நிலைப்பாடு மீதான கேள்வியே அனைவருக்கும் பயனளிக்கும் அரசியல் விமர்சன செயல்பாடாகும் என மே17 இயக்கம் நம்புகிறது.

இதன் மீது நாங்கள் எழுப்பியிருக்கும் விவாதத்தை அரசியலாக எதிர்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றிய மத்திய அரசின் அறிக்கை என்பது தமிழின உரிமையை சட்டவிரோதமாக்கவும், தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவும் வழிவகுக்கக் கூடிய சூழ்ச்சிகரமான நகர்வு என்பதை திமுகவும் அதன் மூத்த உறுப்பினரும் ஏற்கிறார்களா? என்பதே நாங்கள் எழுப்பிய கேள்வி இதற்கான பதிலையே உங்கள் நிலைப்பாடாக அறிய விரும்புகிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply