இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் மூலமே தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி நகர முடியும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்.

- in ஈழ விடுதலை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் மூலமே தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி நகர முடியும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்.

இலங்கையில் உள்நாட்டு விசாரணை என்பது சாத்தியமில்லை. காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவுகளும், நிலங்களை இழந்த தமிழர்களும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் Office of Missing Persons என்பது ஏமாற்று வேலையே. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 30,000க்கும் அதிகமான தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) பரிந்துரைத்திட வேண்டும்.

இலங்கைக்கு மட்டுமான தனி சிறப்பு கண்காணிப்பாளரை(Special Rapporteur) உருவாக்க வேண்டும்.

இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தனி கூட்டத்தொடரை நடத்திட வேண்டும்.

Leave a Reply