மேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்

மேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும் – மே பதினேழு இயக்கம்

இந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநில மொழிகளில் தான் அரசு மற்றும் அலுவல்கள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் இருக்கவேண்டுமென்று நீண்ட நெடுங்காலமாக இந்திய ஒன்றியத்தில் போராட்டங்கள் நடந்துவந்துக்கொண்டிருக்கிறது. இதில் முன்னனியில் இருந்தவர்கள் தமிழர்கள்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மத்தியில் வருகிற அரசுகள் மாநில மொழிகளை புறக்கணித்தே வந்திருக்கிறது. இப்போது இந்த வேலையை தமிழக அரசே முன்னின்று செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பதை தான் நேற்று 10.05.2019 தமிழக பள்ளிகல்வித் துறை வெளியிட்டிருக்கிற அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

அதாவது இனி மேல்நிலைப்படிப்புகளான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் கட்டாயமில்லையென்றும் வேண்டுமென்றால் (Option) படித்துக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு என்பது தமிழை மெல்ல மெல்ல பள்ளி பாடத்திலிருந்து தூக்கிவிட்டு இந்தியை புகுத்தும் நடவடிக்கைக்கான சதியேயாகும்.

இதேபோன்ற சதியை செய்ய முயன்று தான் 1967இல் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி வந்து அப்போதிருந்த அரசு இன்றுவரை எழுந்திருக்கவே முடியாத சூழல் உருவானது. இந்த கடந்தகால வரலாற்றை இப்போதிருக்கிற ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ளவது நல்லது. இல்லையில்லை நாங்கள் சொன்னது சொன்னதுதான் என்று தமிழை புறக்கணிப்போமென்றால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply