மே 17 இயக்கத்திற்கு அறிவிக்கப்படாத வாய்ப்பூட்டுச் சட்டமா?

மே 17 இயக்கத்திற்கு அறிவிக்கப்படாத வாய்ப்பூட்டுச் சட்டமா?

மே 17 இயக்கம் சார்பாக சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடத்த முறையாக காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தோம். அதில் திருமுருகன் காந்தி பேசுவதால் அனுமதி தரமுடியாது என்று மறுத்து விட்டார்கள். இதேபோலத்தான் ஈரோட்டிலும் திருமுருகன் காந்தியை மையமாக வைத்து அனுமதியை மறுத்துவிட்டார்கள். இங்கு ஒரு படி மேலே போய் மே17 இயக்கத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அனுமதியே கிடையாதே பின் ஏன் மறுபடியும் மறுபடியும் வருகிறீர்கள் என்றே காவல்துறை கேட்கிறது. மேலும் 10க்கு மேற்பட்ட இடங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது என்ன திருமுருகன் காந்திக்கும் மே17 இயக்கத்திற்கும் அறிவிக்கப்படாத வாய்ப்பூட்டு சட்டமா போடப்பட்டிருக்கிறது. ஜனநாயக விரோதமாகவும், சட்டவிரோதமாகவும் கருத்துரிமையை நசுக்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply