கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கைது செய்

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கைது செய் – மே பதினேழு இயக்கம்

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் சூலூர் பகுதிக்கு அருகில் பதுவம்பள்ளி என்ற இடத்தில் மார்ச் 25 திங்கள்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் மீது பாஜகவினைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவல்துறையின் கண் முன்னாலேயே இந்த தாக்குதல் நடைபெற்றும், வன்முறையில் ஈடுபட்ட பாஜக கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையினையும் பாஜகவினர் மீது எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் எப்படியாவது வன்முறையை நிகழ்த்தி விட வேண்டும், கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ச்சியாக பாஜகவும், இந்துத்துவ கும்பலும் இயங்கி வருகின்றன. அந்த கும்பலுக்கு சேவகம் செய்யும் மோசமான வேலையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தினை படுகொலை செய்யும் பாஜக கும்பலின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply