கோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு!

கோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு!

கோவையில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த கும்பல் மொத்தமாக கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் – மே பதினேழு இயக்கம்

பொள்ளாச்சி வன்கொடுமையை பற்றி சமூகம் பேசிக் கொண்டிருக்கும் போதே கொஞ்சமும் மனசாட்சி இல்லாத மிருகங்கள் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று வீட்டின் அருகே உள்ள பகுதியில் சிறுமியை வீசி விட்டு சென்றிருக்கின்றன.

தொடர்ந்து பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நிகழும் இந்த கொடுமைகள் தமிழ் சமூகத்தை ஒரு உளவியல் சிக்கலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பல எதிர்கால பெண் சாதனையாளர்கள் வீட்டுக்குள் முடங்கிப் போகும் சூழலை மக்களின் இந்த உளவியல் அச்சம் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

கோவையில் அந்த சிறுமி கொல்லப்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மே பதினேழு இயக்கத் தோழர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் பணபலம் படைத்த அதிகார கும்பல் இருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு நபர்கள் “இந்து பாரத் சேனா” எனும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. இதன் பின்னணியில் உள்ள மொத்த கும்பலும் கண்டறியப்பட வேண்டும். இந்துத்துவ அமைப்பு இச்செயலின் பின்னே உள்ளதால் மத்திய அரசின் அதிகார பலத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனை காவல்துறை அனுமதிக்கக் கூடாது என மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்து பாரத் சேனா போன்ற சமூக விரோத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பாலியல் குற்றங்களின் மீதான பாரபட்சம் இல்லாத நடவடிக்கைகளையும், கடுமையான தண்டனைகளும் அளிக்கப்படுதலையும் அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.

மக்களை உளவியல் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கும், பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடவடிக்கைகளிலும் அரசு முழு வீச்சுடன் இறங்க வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply