பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதிகேட்டு, 19-03-19 செவ்வாய் மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும், பொது சமூக செயல்பாட்டாளர்களையும் விசாரணை குழுவில் இணைத்திட வேண்டும், அரசியல் கட்சி தொடர்புடையவர்கள் உட்பட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர் சுசீந்திரன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து மே பதினேழு தோழர் கொண்டல் கண்டன உரையாற்றினார். இறுதியாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், அரசியல் கட்சிகளின் பின்புலத்தை அம்பலப்படுத்தியும், பாலியல் குற்றத்தில் சமூகத்தின் பங்கை விளக்கியும் உரையாற்றினார்.

Leave a Reply