இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU எனும் கல்வி குறித்தான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கல்விக்கான ஒதுக்கீடு அரசுத் துறையில் எப்படியெல்லாம் குறைக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக் காட்டி பேசினார்.

இன்று(பிப்ரவரி 13, 2019) சென்னையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

அந்த கருத்தரங்கில் “கல்விக்கான முதலீடு மற்றும் ஆராய்ச்சி சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா?” என்ற தலைப்பு தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நாட்டில் மனுதர்மத்தில் தொடங்கி பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட விதம் குறித்தும், பின்னர் அதிலிருந்து கல்வி மீட்கப்பட்டு அனைவருக்கும் அளிக்கப்பட்டதும், இப்போது அரசுத் துறை முதலீடு படிப்படியாக குறைக்கப்பட்டு கல்வி முற்றிலுமாக தனியாக தாரை வார்க்கப்படும் விதங்கள், இதன் மூலமாக மீண்டும் உழைக்கின்ற மக்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழல் உருவாக்கப்படுவது குறித்தும் விளக்கினார்.

Leave a Reply