பாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம்

பாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம்

2016ம் ஆண்டு 500, 1000 செல்லாது என்று மோடி அரசு அறிவித்த சிறிது நேரத்திலேயே, மக்களின் பணம் அனைத்தையும் வங்கிக்குள் கொண்டு வந்து அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை என்று மே பதினேழு இயக்கம் சொன்னது. இதோ இன்று அது நிரூபணமாகியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி மக்களுடைய பணம் பல்வேறு வழிகளில் DHFL நிறுவனத்திற்கு கடனாக கொடுக்கப்பட்டுள்ளது என்று கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் அதனை திரும்பப்பெற எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. இந்த நிறுவனத்துடமிருந்து பாஜக 20 கோடிக்கும் மேல் நன்கொடையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத மாபெரும் ஊழல் என்று இதனை வர்ணிக்கும் கோப்ரா போஸ்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 31,000 கோடிக்கும் அதிகமான மக்களின் பணம் கடனாக, முன்பணமாக என்று பல்வேறு வழிகளில் DHFL நிறுவங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் கூறியுள்ளது. DHFL நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களான கபில் வதவான், அருண வதவான், தீரஜ் வதவான் ஆகியோருக்கு சொந்தமான, ஒரே மாதிரியான முகவரியில் இயங்கும் போலியான நிறுவனங்கள் மூலமாக, அதுவும் எந்த ஒரு பாதுகாப்பு உத்திரவாதம் இல்லாமல் இந்த மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனங்களால் இந்த பணம் வெளிநாடுகளில் சொத்துக்களாக, பங்குகளாக கைமாற்றப்பட்டு விட்டதால், திரும்ப பெறுவது சாத்தியமில்லாதது.

இந்த மோசடி மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது பொதுத்துறை வங்கிகள் தான். ஸ்டேட் வாங்கி மற்றும் பரோடா வாங்கி முறையே 11,000 கோடிகளுக்கு அதிகமாகவும், 4,000 கோடிகளுக்கு அதிகமாகவும் DHFL நிறுவங்களிடம் இழந்துள்ளன. ஆணவங்கள் சரிபார்த்தால் உள்ளிட்ட கடன் வழங்கப்படும் முறைமைகள் எதையும் வங்கிகள் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது. குஜராத் மற்றும் கர்நாடக தேர்தல் சமயங்களில், ஒரே முகவரியில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் 1,000 கோடி அளவிற்கு செபி விதிகளை மீறி முறைகேடாக உள்வர்த்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4,000 கோடி அளவிற்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இலங்கையின் வாயம்பா கிரிக்கெட் அணி வாங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற குஜராத்தை சேர்ந்த பார்ப்பன-பனியா கும்பல்கள் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றதிற்கு பல்வேறு பொய்களை சொல்லி தப்ப முயலும் மோடி, தற்போது அமலமாகியுள்ள இந்த ஊழலுக்கு முழு பெறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது இல்லாமல் சமீபத்திய ஐசிஐசிஐ வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் பாஜக தொடர்பு அமபலமாகி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஊழலை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த மோடி, இதுவரை வரலாறு கண்டிராத ஊழல்களை அரங்கேற்றி வருகிறது.

http://www.jantakareporter.com/india/explosive-cobrapost-exposes-indias-largest-financial-scam-rs-1-lakh-crore-of-public-money-lent-to-dhfl-with-no-chance-of-recovery-rs-20-crore-donated-to-bjp/229573/?fbclid=IwAR33tsrE22al_-SWUGY6nZ3h1bmRggwgtEIVTNBbdMDlDNrg-HgWEovm3co

https://www.cobrapost.com/blog/press-realise-dhfl-l/1374?fbclid=IwAR1D383Ee7yPhUgHSgM4G57nkf7vT6BNOrorf3TWQoRdHQd_LJEiiWgAX0g

Leave a Reply