மதுரை வந்த மோடிக்கு எதிராக நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மதுரை வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (27-1-2019) மதுரையில் கூடிய எண்ணற்ற தோழர்கள் கருஞ்சட்டையுடன், கருப்பு கொடி ஏந்தி, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தமிழர் விரோத செயல்களை கண்டித்து மோடியே_திரும்பிப்_போ என முழக்கமிட்டனர். இதில், தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க தோழர் முகிலன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைமைகள் ஏராளமான தோழர்களோடு கலந்து கொண்டனர். மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply