உயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்

உயர்சாதிகள் பலனடையும் வகையில் மோடி அரசினால் சட்டமாக்கப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடை ரத்து செய்யக் கோரி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 19-01-2019 அன்று மாலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் ஆளூர் ஷா நவாஸ், டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர் தீபக், மறுமலர்ச்சி திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் மல்லை.சத்யா, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் முருகன், தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் விடுதலை ராஜேந்திரன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் குணங்குடி ஹனீஃபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி இந்த இடக்கீட்டை கொண்டுவந்ததன் நோக்கத்தை அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றினார்.

Leave a Reply