புரட்சியும் எதிர்புரட்சியும் – நிமிர் வெளியீடு!

- in நிமிர், மே 17

புரட்சியும் எதிர்புரட்சியும் – நிமிர் வெளியீடு!

அரங்கு எண்: 13 & 14100 ஆண்டுகள் ரஷ்யப் புரட்சி வரலாறு மானுட வரலாற்றிரொரு மைல் கல்லாக இருக்கிறது. அதனுள் மூழ்கி முத்தெடுக்காமல் எந்த நாட்டின் புரட்சியும் சாத்தியமில்லை. அதிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் குவிந்து கிடக்கின்றன. அந்தப் பகுதியின் ஒரு சிறுதுளி தான் இந்த ஆங்கிலக் கட்டுரை. ஜீலை, 2017 Monthly Review இதழில் ஜான் பெல்லாமி ஃபோஸ்டர் அவர்களால் எழுதப்பட்டது. இதனை மொழிப்பெயர்த்து அளிப்பதற்கான காரணம் எதிர்புரட்சி என்பது எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என்பதனைப் பற்றிய புரிதலுக்காகத்தான். லெனின், ஸ்டாலின் மற்றும் ஒட்டுமொத்த சோவியத் யூனியனின் காலத்தின் மீதும் ஏகாதிபத்தியத்தின் கதையாடலை மறுத்து ஒரு மூன்றாம் உலக நாட்டின் சுயேட்சையான தேடலில் ஆராய்வது வரலாற்றின் தேவையாக இருக்கிறது. ஆங்கில வடிவத்தின் சாரம்சம் குறையாமல் தமிழில் தமிழரசன் மொழிபெயர்த்து இருக்கிறார்.

Leave a Reply