பெரியார் கருஞ்சட்டைப் பேரணி – சில புகைப்படங்கள்

தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு காவி-பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்தி, தமிழின உரிமைகளை மீட்கும் நோக்குடன் அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டினை திருச்சியில் டிசம்பர் 23 அன்று நடத்தினர். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர் கருப்பு சட்டையும், கருப்புக் கொடிகளுமாய் காட்சியளித்தது.

பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு மிக வலிமையான பேரணியினை நிகழ்த்திக் காட்டினர். தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் திரள் பேரணியினை நடத்திக் காட்டியிருப்பது மிக முக்கியமான நிகழ்வாக மாறியிருக்கிறது.

மேலும் இப்பேரணியில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்றும், தமிழ்நாட்டை சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மீத்தேன்/ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும், ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.

காவி எங்கள் நிறமல்ல, கருப்பே எங்கள் நிறமடா என்றும், காவி பயங்கரவாதிகளுக்கு பெரியார் மண்ணில் இடமில்லை என்றும், சாதி ஒழிப்போம் என்றும் முழக்கங்கள் ஆர்ப்பரித்தன.

கருஞ்சட்டைப் பேரணியின் சில புகைப்படங்கள்

Leave a Reply