சாதி ஆணவப்படுகொலைகள் – பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டம்

*சேலத்தில்*

மத்திய, மாநில அரசுகளே!
சாதி ஆணவப்படுகொலைகள்,
பெண்குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்து!
கண்டன ஆர்ப்பாட்டம்!

நவம்பர் 24, சனி, மாலை 5 மணிக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம்

சாதி ஒழியும் இடத்தில் தான் தமிழ் வெல்ல முடியும். தோழர்கள் அனைவரும் வாருங்கள். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான நமது குரலை உரத்து எழுப்புவோம்!

சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு சட்டம் இயற்றிடு!

சாதி ஆணவப்படுகொலை செய்யும் குடும்பத்தாரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்!
அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், விவசாயக் கடன்கள், மானியங்கள், சலுகைகள் எதுவும் இல்லை என அறிவித்து சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் வகையில் சட்டம் இயற்றிடு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply