கஜா புயல் நிவாரணப் பணிகளில் மே பதினேழு இயக்கம்

- in வாழ்வாதாரம்

கஜா புயல் நிவாரண மற்றும் உதவிப் பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் குழு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நிவாரணத்திற்கான சேகரிப்பினை தோழர்கள் துவங்கியுள்ளனர்.

கஜா புயலின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான இடங்களில் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. வீடுகள், தோட்டங்கள், கால்நடைகள் என பலவற்றையும் இழந்து மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் முறையான இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசினை வலியுறுத்தும் அதே நேரத்தில், ஆமை வேகத்தில் பணிகளை நகர்த்தும் இந்த அரசினை நம்பி நாம் நம் மக்களை முழுமையாக விட்டுவிட முடியாது. பல ஊர்களுக்கு சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளுக்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இறங்கியுள்ளார்கள். நிவாரணப் பணிகளுக்கான தங்கள் நிதிப் பங்களிப்பினை செய்ய முடிகிற தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்கள், உடைகள் போன்றவற்றையும் அளிக்கலாம். (பழைய துணிகள் மட்டும் தவிர்க்கவும்).

Account Name: Sundaramoorthi.D
Branch: State Bank of India
Branch : K.K.Nagar
Account Type: SB
A/c no : 37918337893
IFSC code : SBIN0007625
MICR : 600002020

தொடர்புக்கு: 7094198005 | 9884072030

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply