வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு எதிராக தோழர் நல்லக்கண்ணு தலைமையில் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

கொடுங்கையூர் குப்பைமேடு என்பது வடசென்னை மக்களின் தீரா பிரச்சினையாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. 350 ஏக்கருக்கு இந்த குப்பை மேடு பரந்து விரிந்திருக்கிறது. இந்த குப்பைமேட்டின் காரணமாக லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறார்கள். நாத்தமும், நச்சுக் காற்றும் நமக்கு மட்டும்தான் சொந்தமா? என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

Leave a Reply