குஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.

கஜா புயலில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருக்கின்றன. ஒக்கி புயல் குஜராத்தை நோக்கி திரும்பிய போது உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி வெளியிட்ட மோடி, கஜா புயல் குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜாவோ, பெரியாரை பாட புத்தகங்களில் வைக்கக் கூடாது என இழிவாக பேசி தமிழர்களை திசை திருப்பி வருகிறார். ஒக்கி புயல் வந்த போதும் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மதக்கலவரத்தை தூண்ட முயன்ற கட்சி தான் பாஜக. தமிழர்களை காக்க சாதாரண மக்களாகிய நாமே தயாராவோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply