ஜெர்மனியின் பிரதான இடது சாரி கட்சியான டை லிங்க் கட்சி திருமுருகன் காந்திக்கு ஆதரவாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கடிதம்

- in பரப்புரை

ஜெர்மனியின் பிரதான இடது சாரி கட்சியான டை லிங்க் கட்சியின் சர்வதேச கொள்கைகள் துறையின் செயலாளரான திரு ஆலிவர் ஸ்க்ரோடர் அவர்கள் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்:

மாண்புமிகு,
ஜனாதிபதி, இந்தியக் குடியரசு,
நியூ டெல்லி, இந்தியா.

மதிப்பிற்குரிய இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு,

நான் இதை எழுதக் காரணம் ஒரு வழக்கை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். அந்த வழக்கில் எதிர்ப்பை பதிவு செய்யும் உரிமை முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அமைதியான அகிம்சை வழி உரிமைகள் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு அவர் மீது மக்களிடையே பகைமையை ஊக்குவித்தார் என்று குறிப்பிட்டும், தேசத் துரோக பிரிவுகளின் கீழும் பலதரப்பட்ட கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக உறுதியாக குரல் எழுப்புவதை தன் அன்றாட வாழ்க்கை முறையாக கொண்ட ஒரு சமாதான செயல்பாட்டாளர் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த வழக்கை மீண்டும் மறுபரிசீலனை செய்து ஏதேனும் தகுந்த ஆதாரங்கள் இவரை குற்றச்சாட்டுவதற்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் குற்றச்சாட்டிற்காக போலி ஆவணங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாட்டின் தலைவர் என்பதால் இந்த ஜனநாயகக் கோரிக்கையை உங்களிடம் வைப்பதை நாங்கள் முக்கியமானதாக உணர்கிறோம். ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு, திருமுருகன் காந்தி வழக்கைப் பொறுத்தவரை, எதிர்ப்பை பதிவு செய்பவதை காலனி ஆதிக்க முறையில் ஒடுக்குவது ஏற்புடையதாக இல்லை. அகிம்சையின் தந்தை மோகன்தாஸ் காந்திய நாட்டில் எதிர்ப்புகளை சகித்துக் கொண்டு, தனிமனித சுதந்திரத்தையும், உரிமைகளையும் செயல்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்.
நன்றி

இப்படிக்கு
ஆலிவர் ஸ்க்ரோடர் (Oliver Schröder)
டை லிங்க்
DIE LINKE
தலைவர் சர்வதேச கொள்கைகள் துறை

————————–————————–

டை லிங்க் கட்சிக்கும், ஆலிவர் ஸ்க்ரோடர் அவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply