ஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை

ஏழு தமிழரை உடனே விடுதலை செய்ய ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தினை ஏற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு நிரபராதி தமிழரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று 29-9-18 சனி அன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே பதினேழு இயக்க கலைக் குழுவின் விடுதலை பறையுடன் கூட்டம் துவங்கியது.

ஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு உரிமை இல்லை என்றும், தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தினைஆளுநர் ஏற்காமல் இருப்பதென்பது, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும், காந்தியை கொன்ற கோபால் கோட்ஸேவினை 16 ஆண்டுகளில் விடுவித்த போது, நிரபராதி தமிழர்களுக்கு 28 ஆண்டுகளாய் சிறை எதற்கு என்றும், ஜெயின் கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமி விசாரிக்கப் படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி தோழர்கள் பேசினர்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மே பதினேழு இயக்கத் தோழர் விவேகானந்தன் ஆகியோர் உரையாற்றினர்.

Leave a Reply