நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தியை சந்தித்தார் வைகோ

- in பரப்புரை

இன்று 26-9-2018 திருமுருகன் காந்தியை சந்திப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களை கண்டித்தும் பேசினார்.

தோழர் திருமுருகன் காந்தி திங்கட்கிழமை அன்று உடல்நலக் குறைவின் காரணமாக வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

முதலில் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தோழர் திருமுருகன் காந்தி மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று காலையிலேயே திருமுருகன் காந்தி அவர்கள் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து முக்கியமான அறிக்கையினை திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த அவர் திருமுருகன் காந்தியை திரும்ப அழைத்துச் செல்லும் வரை சுமார் 5 மணி நேரம் நீதிமன்ற வளாகத்திலேயே இருந்தார்.

திருமுருகன் காந்தி கைதைக் குறித்து லட்சக்கணக்கான இளைஞர்களிடம் கோப ஆவேசம் இருக்கிறது. அவரது உடல் நலத்தினை கெடுத்து, அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து வருவதாக திரு.வைகோ அவர்கள் குற்றம் சாட்டினார்.

Leave a Reply