எழும்பூர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி – 14-9-2018

- in பரப்புரை

ஊபா சட்டத்தில் திருமுருகன் காந்தி அவர்களை கைது செய்ய முடியாது என்று ஏற்கனவே இரண்டு முறை நீதிபதி தெரிவித்திருந்தார். அரசு சார்பில் காவல் ஆணையரிடம் அறிக்கை பெற வேண்டுமென்று 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று 14-9-18 விசாரணைக்கு வந்தது. இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், ஊபா வழக்கில் திருமுருகன் காந்தி அவர்களை கைது செய்வதா இல்லையா என்ற ஆணை வரும் செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு முடிந்து திருமுருகன் காந்தி அவர்களை வெளியில் அழைத்து வரும் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, காவல்துறையினர் திருமுருகன் காந்தி அவர்களை பேச விடாமல் கடுமையாக பிடித்து தள்ளினர். ஒரு குற்றவாளியைப் போல அவரைப் பிடித்து இழுத்து தள்ளினர்.

வேலூர் சிறையில் தனிமை சிறையில் வைத்திருந்தும், வெளியில் கொண்டு வரும் போதும் கடுமையாக கையாண்டும் மிகப் பெரிய மனித உரிமை மீறல்களில் மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின் படி காவல்துறை செய்து வருகிறது.

திருமுருகன் காந்தி அவர்கள் மீதான இத்தகைய ஜனநாயக மறுப்புக்கும், உரிமை மீறலுக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

பாஜக அரசின் பாசிசத்திற்கு எதிராக இணைவோம்.

Leave a Reply