திருவொற்றியூர் மற்றும் ஆலந்தூர் நீதிமனறங்களில் திருமுருகன் காந்தி(4-9-18)

திருவொற்றியூர் மற்றும் ஆலந்தூர் நீதிமனறங்களில் திருமுருகன் காந்தி(4-9-18)

கடந்த ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து வெளியில் வந்து புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து பேசியதாக இரண்டு தேசத்துரோக வழக்குகள் பிரிவு 124-Aன் கீழ் பதியப்பட்டுள்ளன. அந்த வழக்கில் ரிமாண்ட் Extension செய்வதற்காக திருவொற்றியூர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

தூத்துக்குடி படுகொலைக்கு சர்வதேச அளவில் நீதி தேடுவோம் என்று Facebookல் ஒரு வீடியோ பேசி பதிவிட்டதாக மற்றொரு தேசத்துரோக வழக்கு 124-Aன் கீழ் பதியப்பட்டுள்ளது. இதற்காக ஆலந்தூர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

ஏற்கனவே தூத்துக்குடி படுகொலை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்கும் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்ட மாணவி சோஃபியா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசினார்.


 

Leave a Reply