திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு தேசத்துரோக வழக்கு!

- in பரப்புரை
திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு தேசத்துரோக வழக்கு!
அந்த வழக்கில் இன்று(24-8-18) மதியம் 01:30 மணியளவில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு, அது குறித்து Facebook-ல் பேசி ஒரு வீடியோவினை பதிவிட்டு பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி படுகொலைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடுவோம் என்று பேசியிருந்தார்.

அதற்கு பிரிவு 124-A ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேடைகளில் பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டு வந்த அரசு, தற்போது இணையத்திலும் கைவைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்படுவதன் அறிகுறியே இந்த தேசத்துரோக வழக்கு.

இந்த அடக்குமுறையினை கேள்விக்குட்படுத்தாவிட்டால் இது போராடும் அனைவரின் மீதும் அடக்குமுறை செலுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படும்.

தூத்துக்குடி படுகொலையின் நீதிக்காக திருமுருகன் காந்தி மேற்கொண்ட வேலைகளுக்கு பழிவாங்கும் நோக்குடன் பாஜக-எடப்பாடி அரசுகள் இந்த அடக்குமுறையினை ஏவிவருகின்றன. இதுவரையில் 13 வழக்குகளில் தோழர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது.

Leave a Reply