வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு 600 கோடி, சுயதம்பட்டம் அடிக்க 4,880 கோடியா?

- in பரப்புரை

வரலாறு காணாத பெரும் வெள்ளத்திற்கு 600 கோடி, சுயதம்பட்டம் அடிக்க 4,880 கோடியா?

கேரளாவில் கடந்த 94 வருடங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 81 நாட்கள் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் 373 கேரள மக்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்றும், சுமார் 1.2 மில்லியன் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழலில் கேரளாவிற்கு முதல் ஆளாக உதவி செய்திருக்க வேண்டிய மத்திய பிஜேபி அரசு அரசியல் லாப நோக்கத்தோடு இந்த பெருந்துயரை கண்டும் காணாமல் விட்டு விட்டது.

இந்த பெரும் அழிவிலிருந்து கேரளாவை மீட்டெடுக்க சுமார் 2600 கோடி தேவைப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறார். அதற்கு மத்திய அரசோ வெறும் 100 கோடியை மட்டும் ஒதுக்கி தனது வெஞ்சினத்தை காட்டியிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக்கு மத்திய பிஜேபி மோடி அரசு உள்ளானது. எனவே வேறு வழி இன்றி கூடுதலாக 500 கோடியை ஒதுக்கி இந்த பிரச்சனையில் இருந்து மத்திய அரசு கைகழுவி கொண்டது.

இது ஏதோ மோடி அரசு கேரளாவிற்கு மட்டும் இப்படியாக நடந்து கொண்டதாக எண்ணி விட வேண்டாம். இந்த வருடத்தில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களிலும் மத்திய பிஜேபி அரசு இவ்வாறாகத்தான் நடந்து கொண்டுள்ளது (பார்க்க படம் 1).

மாநில அரசுகளிடமிருந்து வரி என்ற பெயரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி போல் வசூலிக்கும் மத்திய அரசு. அந்தப் பணத்தை எல்லாம் தன்னை பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்தி வருகிறது என்பதுதான் துயரம். உதாரணமாக கடந்த 2014இல் மோடி பிரதமர் ஆனதில் இருந்து இன்று வரை விளம்பரத்திற்காக செலவழித்த தொகை மட்டும் 4,880கோடி. இதை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாநில தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்திருக்கிறார்.( பார்க்க படம் 2 & 3).

விளம்பரத்திற்காக செலவழித்த இந்த 4,880 கோடியை சரியான முறையில் செலவழித்திருந்தால். இந்தியாவில் 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கியிருக்க முடியும். அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் படி 200மில்லியன் தினக்கூலிகளுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்திருக்க முடியும். மேலும் 6 மில்லியன் புதிய கழிவறைகளை கட்டியிருக்க முடியும்.10முறை செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியிருக்க முடியும். இவ்வளவு பயனுள்ள வேலைகளை செய்து இருக்க வேண்டிய பணத்தை விளம்பரத்திறகாக செலவழித்த உத்தமர்தான் பிஜேபி அரசின் மோடி.

 

Leave a Reply